கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது

கோவை பார்க் பொறியியல் கல்லூரியில் ”விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் பேராசிரியர் S. புவனேஸ்வரி கலந்து சிறப்புரையாற்றினார்.


கோவை: பார்க் பொறியியல் கல்லூரியானது கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கணியூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.

இது இந்தியாவின் ஐந்தாவது சிறந்த பல்கலைக்கழகமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு ஐஎஸ்ஓ 9002 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் விவசாய பொறியியல் துறையின் சார்பாக "விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை 10 Nov 2022 அன்று கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறைக்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் Dr. லக்ஷ்மணன் வரவேற்றார்.

மாணவர்கள் இது போன்ற பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தெரிவித்தார்.



இந்த பயிற்சி பட்டறையின் ஒரு பகுதியாக "தொழில் முனைவு மற்றும் விவசாய மருத்துவம்" என்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக Megha Group of Business நிறுவனர் S. புவனேஸ்வரி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் வருகை பேராசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வேளாண் துறையின் புதிய முயற்சிகள் மற்றும் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.

மதிய வேளையில் கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினர் செல்வகுமார், நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர், Greeno Tech Solutions, கோவை இந்த துறைசார்ந்த ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்கான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.



இந்த கருத்தரங்கில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இறுதியாக தேசிய கீதத்துடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...