திருப்பூரில் என்.ஐ.ஏ போலிசார் ஜமேசா முபின் உறவினரிடம் மூன்று மணி நேரம் விசாரணை

கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவமாக என்.ஐ.ஏ போலீசார் ஜமேசா முபின் உறவினரை திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து மூன்று மணி நேரம் விசாரணை செய்துள்ளது.



திருப்பூர் : கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மேலும் வழக்கு என்.ஐ.ஏ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபினின் உறவினர் திருப்பூரைச் சார்ந்த யூசுப் என்பவரிடம் இன்று காலை முதல் என்.ஐ.ஏ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவையில் இருந்து வாடகை கார் மூலம் வந்த என்.ஐ.ஏ போலீசார் வெங்கடேஸ்வரா நகர் ஆறாவது வீதியில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை மேற்கொண்டு பின்பு அவரை திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து மூன்று மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



விசாரணை முடிந்த பின் முகமது யூசுப்பை விடுவித்தனர்

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...