கோவை கார் வெடிப்பு விவகாரம் : கோவை உட்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை…!

இன்று காலை முதல் கோவை மாவட்டத்தில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என தமிழகம் முழுவதும் சுமார் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.



கோவை: கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்.



வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை முதல் கோவை மாவட்டத்தில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என தமிழகம் முழுவதும் சுமார் 45 இடங்களில்தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.



குறிப்பாக, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் கோவையில் இருந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நேற்று இரவு மீண்டும் அவர்களை சென்னையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்து வந்த அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...