திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று புதிதாக மதுபான கடை தொடங்கப்பட்டுள்ளது.
மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மதுபான கடையால் அப்பகுதி வழியே செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே கடையை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுபான கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.