கோவையில் வேறொருவரின் நிலத்தை காட்டி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடி - பெண் உட்பட இருவர் கைது

ஒண்டிப்புதூர் அருகே காளப்பட்டி நேரு நகரில் வேறொவரின் நிலத்தை விற்பனை செய்வதாக கூறி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது.


கோவை ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டுவதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ஜெகநாத்சிங், கலைவாணி ஆகியோரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்து சென்று நிலம் ஒன்றை காண்பித்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நிலம் கார்த்திக் பிரபுவுக்கும், அவரது மனைவிக்கும் பிடித்திருந்ததால் வாங்க முன்வந்துள்ளனர்.

இந்த நிலத்தின் விலை ரூ.49 லட்சம் என்றும் முன்பணமாக ரூ.30 லட்சம்கொடுத்தால் தான் அடுத்தகட்ட பணியை மேற்கொள்ள முடியும் எனவும் ஜெகநாத்சிங் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஆசிரியர் கார்த்திக்பிரபு அவரிடம் முன்பணமாக கேட்கப்பட்ட ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் இதனையடுத்துவீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் தெரிகிறது.

இந்நிலையில் ஆசிரியர் கார்த்திக்பிரபு விசாரித்த போது, இவர்களுக்கு காண்பிக்கப்பட்ட நிலமானது வேறொருவருடையது என்பதும், பொய்யாக நிலத்தை காட்டி முன்பணமாக ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி குறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கார்த்திக்பிரபு புகாரளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...