கடந்த அதிமுக ஆட்சியில் கோவையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல், அலங்கார தேவைகளுக்கு மட்டுமே பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் நிலுவையில் உள்ள பாலங்கள் விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் 2, 3 மாதங்களில் நிறைவு பெறும்.



கோவை: திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக செயற்குழு கூட்டம், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை கோவைக்கு வருகை தர உள்ள முதலமைச்சருக்கு கோவை விமான நிலையத்தில்உற்சாக வரவேற்பு அளிப்பது, கட்சி சார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், கோவை மாவட்டத்தில் புதிதாக கட்டப்படவுள்ளதிமுக அலுவலகம், கோவை மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.



மேலும், அலுவல் மொழி மூலம் இந்தி திணிப்பை எதிர்த்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,ஒன்னறை ஆண்டுகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வரும் 11 ஆம் தேதி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புதியதாக 50,000 விவசாய மின் இணைப்புகளை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை காலை 10 மணியளவில் முதலமைச்சர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசணை செய்யப்பட்டது.



கோவையில் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, 211 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலைகள் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போட வேண்டிய சாலைகள். கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள். இந்த சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் சில அலங்கார பணிகளுக்கு செலவு செய்யப்பட்டது. ஆனால், அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை.



முதலமைச்சர் மக்களின் அடிப்படை தேவைடை நிறைவேற்ற 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். தற்போது, 26 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் மார்ச் மாதத்திற்குள் துவங்கும். இதேபோல நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சாலை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும்.

கோவை மக்கள் மற்றும் தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கையான விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 85 சதவீதம் நிறைவறைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் 2, 3 மாதங்களில் நிறைவு பெறும். பொத்தாம் பொதுவாக குறை கூடாது. என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தபின் கருத்து தெரிவிக்க வேண்டும்.



கோவையில் நிலுவையில் உள்ள பாலங்கள் விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவிநாசி சாலை பாலப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கோவையில் திமுக அலுவலகம் கட்ட அவிநாசி சாலையில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. அதன், டிசைன் ரெடியாகி வருகிறது. விரைவில் பணிகள் துவங்கும், என்றார்.

மேலும், இன்றைய செயற்குழு கூட்டத்தில், வருகின்ற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு முகாமில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் சிறப்பாக செய்வது குறித்து ஆலோசணை செய்யப்பட்டது, என்றார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...