கோவையில் யோ யோ செயலி மூலம் பழகி பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் - சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கோவையில் பெண் ஒருவரிடம் யோ யோ செயலி மூலம் பழகி புகைபடங்களை பெற்று பணம் கேட்டு மிரட்டிய நபரை கைது செய்யபட்டார். கைதான பரமசிவம் மீது IT (Amendment) Act 2008 and 4 of TN Prohibition of Harassment Of Women act 2002 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை.



கோவை: கற்பனைக்கு கூட எட்டாத அளவுக்கு சினிமா பட பாணியில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து குற்றவாளிகள் சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட பின்னரே, இவ்வாறெல்லாம் கூட குற்றங்கள் நடைபெறுமா? என்று நினைக்கும் அளவிற்கு விதவிதமான நூதன ஏமாற்று வேலைகள் மூலம் பெண்கள் குறிவைக்கப்படுகின்றனர்.

இதை நிரூபிக்கும் விதமாக கோவையில் ஒரு இளம் பெண் செல்போன் செயலி மூலம் நூதன முறையில் ஏமாற்றப்பட்டுள்ளதை குறித்து இந்த சிறப்பு செய்தியில் காண்போம்.

யோ யோ செயலி

யோ யோ எனும் செயலி மூலம் ஒரு நபர் இந்த பெண்ணிடம் அறிமுகமாகின்றார். அந்த நபர் புரொஃபைல் பிச்சரை பார்க்கையில் ஒரு ஆண் மாடல் போல தோற்றம் அளித்திருக்கின்றார். பின்னர், இருவரும் நாள்பட பேசி நட்பாக பழகி அந்த பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை (அந்தரங்க) அந்த ஆண் நண்பர் பெற்றிருக்கின்றார்.

இந்த நிலையில், கோவையில் உள்ள ஒரு இடத்துக்கு இருவரும் பொதுவெளியில் முதன் முதலாக பார்க்க திட்டமிட்டனர். பேசியபடி, இருவரும் குறித்த அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது முதன்முதலில் அந்த ஆண் நண்பரை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

அவனா நீ...? 

புரொஃபைல் பிச்சரில் பார்த்த வாட்டசாட்டமாக மாடல் போல் காட்சி அளித்த நபரா இவர் என்று அந்த பெண் திகைத்து நின்றுள்ளார். மனமுடைந்த பெண் அந்த ஆண் நண்பரை சந்திக்காமலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

பணம் கேட்டு மிரட்டல்

அந்தப் பெண் தன்னை புறக்கணிப்பதை புரிந்து கொண்ட அந்த ஆண் நண்பர், அவரிடம் இருந்து பெற்றிருந்த அந்தரங்க புகைப்படங்களை காட்டி இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பணம் பறிக்க முயன்றிருக்கின்றார்.

இதனால் பதட்டமடைந்த பெண், ஒரு சிறு தொகையை அந்த ஆண் நண்பருக்கு தந்ததாக கூறப்படுகின்றது. ஆனாலும், அந்த ஆண் நபரின் டார்ச்சர் தொடரவே, வேறு வழி இல்லாமல் அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது போலீசார் அதிர்ந்து போயினர்.

புரொஃபைல் பிக்சர் மூலம் பித்தலாட்டம். 

யாரோ ஒரு அழகான ஆண் புகைப்படத்தை தனது புகைப்படமாக புரொஃபைல் பிச்சரில் வைத்து பெண்ணை ஏமாற்றிய அந்த நபரின் பெயர் பரமசிவம். செக்கியூரிட்டியாக வேலை பார்க்கும் அவர், டிப்ளமோ EEE படித்து பின்னர் BE (EEE) படித்திருக்கின்றார். 

பலே கில்லாடியான பரமசிவம், பல பேருக்கு செக்கியூடிட்டியாக வேலை செய்துள்ளார். பல பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடியில் அவருக்கு அதீத நாட்டம். அவரது நேரத்தை பெண்களை ஏமாற்ற ஸ்கெட்ச் போடுவதற்கே பெருமளவில் செலவழித்து வந்துள்ளார். 

செக்யூரிட்டி வேலையை பார்க்காமல், சோசியல் மீடியாவில் வலம் 

வாட்ஸப், ஃபேஸ்புக், யோயோ, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பொழுதுபோக்கு சமூக வலைதளங்களில் கணக்கை ஆரம்பித்து. அதில் ஆன்லைனில் டவுன்லோடு செய்யப்பட்ட அழகான ஆண்கள் புகைப்படங்களை புரொஃபைல் பிச்சர்களை ஸ்டைலாக வைத்திருக்கின்றார்.

இதனை பார்க்கின்ற பெண்கள் நட்பாக பேசுவதை தவறாக பயன்படுத்தி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று அதனை வைத்து பிளாக் மையில் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாகவே பரமசிவம் பார்த்து வந்துள்ளார். 

சமூக வலை தள பக்கத்தை தரவிரக்கம் செய்து பெண்களிடம் பேசும் செல்ஃபோனை வைத்து போலீசார் மடக்கி பிடித்து விடுவார்கள் என்பதற்காக, அவரது செல்போனை மதுரையில் உள்ள கடை ஒன்றில் பரமசிவம் விற்றிருக்கின்றார். பின்னர் அந்த செல்போனில் பயன்படுத்திய சிம் கார்டை சென்னைக்கு அருகாமையில் வீசியிருக்கின்றார். 

போலீசாரிடமிருந்து தப்பிக்க பல்வேறு தொழில்நுட்பங்களை பரமசிவம் பயன்படுத்தி வந்த போதும்,, சைபர் கிரைம் போலீசார் பயன்படுத்தும் நவீன புலன் விசாரணை மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் இருந்து தொழில்நுட்பம் மூலம் பரமசிவம் போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். 

கைதான பரமசிவம் மீது ஐ பி சி 419, 420, 506 (1) IPC, 66 (C), 66 (D), 67 of IT (Amendment) Act 2008 and 4 of TN Prohibition of harassment of women act 2002 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது கோவை சைபர் கிரைம் போலீசார். 

கடந்த காலங்களில் இது போல் எத்தனை பெண்களை இவர் பிளாக்மெயில் செய்து பணம் பறித்துள்ளார் போன்ற விவரங்களை சேகரிக்க அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...