கோவையில் இருந்து கேரளா கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 5 டன் ரேசன் அரிசி மூட்டைகள் பிடிபட்டன. காவல் துறையினர் விசாரணையில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வல்லரசு குறிஞ்சியை சேர்ந்த செந்தில் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.


கோவை: தமிழக - கேரளா எல்லை மாவட்டமான கோவையில் இருந்து அடிக்கடி கேரளாவிற்கு பொது விநியோக ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்ததமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு எஸ்.பி. பாலாஜி,அதிகாரிகள் டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர் விவேகானந்தன், பரமேஸ்வரன் உள்ளிட்டோர், கோவை - கேரளா சாலைகளில் கண்காணிப்பு பணியை தீவிரபடுத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை மதுக்கரை சுங்கச்சாவடி அருகே எஸ்.பி.பாலாஜி தலைமையில் திடிர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திடமாக வந்த டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக பொது விநியோக ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து முழுமையாக சோதனை செய்த போதுடெம்போவில் தலா 50 கிலோ மூட்டைகளாக 100 மூட்டைகளில் சுமார் 5 டன் ரேசன் பொது விநியோக ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரது மகன் வல்லரசு (23). என்பதும் இவர் குறிச்சியை சேர்ந்த செந்தில் என்பவரிடம் ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததும், கோவையில் பல்வேறு பகுதிகளில் பொது விநியோக ரேசன் அரிசி மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வல்லரசு மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 டன் ரேசன் அரிசி மற்றும் டெம்போ வேனையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...