கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக காவல்துறை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அவதூராக பேசி கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.


கோவை: கோவையின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்றுதிராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கடந்த மாதம் 23ஆம் தேதி கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இதற்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு எதிர் கருத்து தெரிவித்திருந்தார்.அதேபோல, திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்கள் அண்ணாமலையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், இன்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில்செயலாளர் கா.சு.நாகராஜ் தலைமையில், அண்ணாமலையை கைது.செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழக காவல்துறையையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவதூராக பேசி கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர்.



Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...