திருப்பூர் பல்லடம அருகே ஆட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு - சிறுத்தையாக இருக்குமோ என மக்கள் அச்சம்

பல்லடம் அருகே மர்ம விலங்கு ஒன்று ஆட்டை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது சிறுத்தையாக இருக்கலாம் என பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்ல்டத்தை அடுத்த கரடிவாவி பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பையே முக்கிய தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர்,

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தோட்டத்து பகுதியை மர்ம விலங்கு ஒன்று கடந்து சென்றது. அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் விலங்கு கடந்து சென்றது பதிவாகியிருந்தது.



அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் விலங்கின் காலடி தடத்தை ஆய்வு செய்தனர். அந்த மர்ம விலங்கு சிறுத்தையா அல்லது வேறு ஏதும் விலங்காக என உறுதியாக தெரியவில்லை என கூறிவிட்டு சென்றனர்.



இந்நிலையில் இன்று கரடிவாவியில் உள்ள ஒட்டந்தோட்டத்தில் பச்சியம்மாள் என்பவருடைய ஆடு மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஆட்டின் கழுத்தில் மர்ம விலங்கின் பல் தடம் ஆழமாக பதிந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது,

ஏற்கனவே சிறுத்தை போன்ற மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், தற்போதுஒரு ஆடு பலியாகியுள்ளது. வனத்துறை உடனடியாகமர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆட்டை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு, சிறுத்தையாக இருக்குமோ என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...