நேற்று கோவை பேரூர் செல்வபுரம் பைபாஸ் சாலையில் பாஸ்கரன் என்பவரது வீட்டில் இருந்து சுமார் 113 செ.மி உயரமும், 300 கிலோ எடை கொண்ட உலோக சிலையை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை பேரூர் செல்வபுரம் பைபாஸ் சாலையில் நேற்று பாஸ்கரன் சுவாமிகள் என்பவரது வீட்டிலிருந்து 300 கிலோ எடை கொண்ட ஐம்பொன் பாலதண்டாயுதபாணி சிலை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தகுந்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால், சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சிலை தொன்மையானதா..?என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்இந்த நிலையில் இன்று சிலை மீட்பு குறித்துதமிழக காவல்துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் என்று ஏமாற்றி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில்,.சிலை திருட்டு தடுப்புப்பிரிவு இயக்குநர் முனைவர். ஜெயந்த்முரளி மற்றும் காவல் துறை தலைவர் தினகரன் ஆகியோர் உத்தரவின் பேரில், சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரவி அறிவுறுத்தலின்படி,திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை போலீசார், சிலை வாங்குபவர்கள் போல பேசி மாறுவேடத்தில் சென்று விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
கோவையில் சோதனை.
தகவலின் அடிப்படையில், கடந்த 4ஆம் தேதிகோவைஉக்கடம் - செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள யோக சாஸ்தா கார்டன் என்ற முகவரியில் பழைய தொன்மையான சிலைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், சாஸ்தா கார்டனில், சோதனையிட கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மிகவும் பழமையான பாலதண்டாயுதபாணி உலோக சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உக்கடத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவரிடம் விசாரணை
இதுதொடர்பாக உக்கடத்தை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிலையை அவருடைய பொறுப்பில் வைத்திருப்பதாகவும், அதற்கென எந்தவொரு ஆவணங்களும் இல்லை என்று தெரியவந்துள்ளது.மேலும், சிலை எப்படி தன்னிடம் வந்தது? யார் கொடுத்தது? என்ற எந்த விவரத்தையும், உரிய ஆவணங்களையும், பாஸ்கரன்சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.
300 கிலோ எடை கொண்டபாலதண்டாயுதபாணி சிலை மீட்பு.
பொதுவாக சுமார் 300கி.கி எடையுள்ள இவ்வளவு பெரிய பாலதண்டாயுதபாணி சிலையையும், திருவாச்சியையும் தனிநபர் வீடுகளில் வழிபடுகின்ற வழக்கம் இல்லை என்பதால், குறிப்பிட்ட உலோக சிலை ஏதாவது ஒரு பழமையான கோவிலில் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சாட்சிகளாககிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், கோவை டவுன் (பொறுப்பு) உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் சுமார் 113 செ.மி உயரமும், 300 கிலோ எடை கொண்ட உலோக சிலையை கைப்பற்றி கோவை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் சத்தியபிரபா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட சிலை உடனடியாக கும்பகோணம் நீதிமன்றத்தில் சமா்பிக்கப்பட்டு, அதன் தொன்மை குறித்து இந்திய தொல்லியல்துறை மூலமாக அறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசாருக்கு டிஜிபி பாராட்டு.
காவல் துணைக்கண்காணிப்பாளர் ம.சந்திரசேகரன், காவல் ஆய்வாளர் சத்தியபிபரபா, சார்பு ஆய்வாளா்கள் ராஜேஸ், பாண்டியராஜன், ராஜேந்திரன், சிறப்பு சார்பு.ஆய்வாளா் கந்தசாமி, சந்திரன்,
தலைமை காவலர்கள் -nசந்திரக்குமார், பரமசிவன், சிவபாலன், பாண்டி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசாருக்கு காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.