சூலூரில் குட்கா வேட்டை: இருவேறு இடங்களில் மூன்றரை டன் குட்கா பறிமுதல் - போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

கோவை சூலூரில் குட்கா வேட்டையில் ஈடுபட்ட போலீசார், இருவேறு இடங்களில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் மூன்றரை டன் குட்காவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் நேரில் பாராட்டு தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் தனிப்படை போலீசாருக்கு பெங்களூரில் இருந்து கேரளாவை நோக்கி வரும் ஆம்னி பேருந்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், நீலாம்பூர் அருகே தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த சொகுசு பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த சொகுசு பேருந்தில் இருந்த ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் சொகுசு பேருந்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், ஓட்டுனரின் இருக்கைக்கு மேலே உள்ள சீட்டை சோதனை செய்த போது, அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, பேருந்து முழுவதும் சோதனையிட்ட போது, பேருந்துக்கு பின்புறம் உள்ள எமர்ஜென்சி எக்ஸிட் ஜன்னலுக்கு கிழே இருந்த இருக்கையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.



இதன் பின்னர் ஓட்டுநர் உட்பட பேருந்தில் பயணித்த அனைவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.



பின்னர் பேருந்தில் மறைத்து வைத்திருந்த இரண்டு டன் அளவிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,



குட்கா டீலர்களான செந்தில்குமார் மொஹப் பாஷா, செந்தில் ராஜா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.

இதேபோல் மைசூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து மயிலம்பட்டி பகுதியில் குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்களை பெட்டிக்கடைகள் மற்றும் வட மாநில நபர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், குடோனில் சோதனை செய்த போலீசார், குடோனிலிருந்து ஒன்றரை டன் குட்காவை பறிமுதல் செய்தனர். பின்னர் குடோனில் தங்கி இருந்த பரத் பட்டேல், அமரராம், கோபால் மற்றும் மைபால் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில், சுமார் 3 டன் குட்கா விற்பனையை தடுத்து நிறுத்தியது தொடர்பாக தகவலறிந்த கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன், சூலூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



இதனையடுத்து திறம்பட கையாண்டு குட்கா பொருட்களை மடக்கி பிடித்த டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.



இதன் பின்னர் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, புறநகர் பகுதியான சூலூரில் திறம்பட பணியாற்றிய தனிப்படை போலீசார் வாகன சோதனையின் போது குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதில் இருபது லட்சம் பணம் மற்றும் 3 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் குட்கா பொருட்களை ஒழிப்பதற்காக காவல்துறையினர் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் மாணவர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் எளிதில் கிடைக்காத வண்ணம் கோவை மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள், 366 வழக்குகள் பதியப்பட்டு கஞ்சா வழக்கில் மட்டும் 544 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம்.

கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரை இதுபோன்ற வழக்குகளில் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த வருட இறுதிக்குள் 20 பேர் மீது குண்டாஸ் வழக்குகள் போடப்படும். மேலும் 33 பேர் ஏற்கனவே இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமினில் வெளியே உள்ளனர்.

அவர்களையும் மீண்டும் சிறையில் அடைப்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் அதேபோல கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு கிராமங்களில் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த குட்கா பொருள்கள் பதுக்கி வருபவர்களை கண்காணித்து கைது செய்து வருகிறோம். தொடர்ந்து அதே போன்ற நடவடிக்கையை காவல் துறையை மேற்கொள்ளும் பெரும்பாலும் பெங்களூர் நகரத்திலிருந்து குட்கா பொருட்கள் தமிழகம் நோக்கி வருகிறது.

அதனை தடுப்பதற்கான முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 2 ஆம்னி பேருந்துகளில் இருந்து குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேபோல கனரக லாரிகளிலும் இதே போன்று கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சோதனை நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...