கோவை வேளாண்‌ பல்கலை.-யில்‌ வரும் நவ.7ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள்‌ பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை சார்பில், வரும் நவம்பர் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு தொடர்பான ஒருநாள் தொழில்நுட்ப பயிற்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில், பூச்சியியல்‌ துறை சார்பில் ஒவ்வொரு மாதமும்‌ தேனீ‌ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள்‌ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நவம்பர் மாதத்திற்கான பயிற்சி தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வரும் திங்கள்கிழமை (07.11.2022) அன்று கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வரும் 7ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. .

இந்த பயிற்சியின்‌ முக்கிய அம்சங்கள், ‌

1) தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்‌

2) பெட்டிகளில்‌ தேனீ வளர்க்கும்‌ முறை மற்றும்‌ நிர்வாகம்‌

3) தேனீக்கு உணவு தரும்‌ பயிர்கள்‌ மற்றும்‌ மகரந்த சேர்க்கை மூலம்‌ மகசூல்‌ அதிகரிக்கும்‌ பயிர்களின்‌ விவரம்‌

4) தேனைப்‌ பிரித்தெடுத்தல்‌

5) தேனீக்களின்‌ இயற்கை எதிரிகள்‌ மற்றும்‌ நோய்‌ நிர்வாகம்‌

இந்த பயிற்சியில்‌ கலந்துகொள்ள விரும்புவோர்‌, பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் அப்போதே, பயிற்சிக்‌ கட்டணம்‌ ரூ.590/- (ரூபாய்‌ ஐநூற்று தொண்ணூறு மட்டும்‌) நேரடியாக செலுத்த வேண்டும்‌.

காலை 9.00 முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியின்‌ இறுதியில்‌ சான்றிதழ்‌கள் வழங்கப்படும்‌.

அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, வேளாண்‌ பூச்சியியல்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌ கழகம்‌,

கோயம்புத்தூர்‌

மேலும்‌ விவரங்களை அறிந்து கொள்ள, 0422-6611214 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...