வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மும்முரம் காட்டும் கோவை மாவட்ட நிர்வாகம்

கோவையில் வடகிழக்கு பருவமழை அதிகம் பொழிந்தாலும் இயல்பு வாழ்க்கை பொழிவிழக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராகியிருக்கின்றோம். பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்திற்கும் 66 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்திருக்கிறது.



கோவை: வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியிருக்கின்ற நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்து இருக்கின்றன.

இப்போது சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பொழிய ஆரம்பித்திருக்கிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்த அறிப்பானது;-

பருவ மழையினால் ஏற்படும் பேரிடரை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. வருவாய் துறையின் கீழ் மருத்துவத்துறை, கால்நடை துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு ஏற்றவாறு மருந்துகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களையும் தயார் நிலையில் மருத்துவத்துறை வைத்திருக்கின்றது.

கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளும் கால்நடை துறை சார்பாக தயார்படுத்த பட்டிருக்கின்றன. ஏதேனும் கால்நடைகளுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக அழைக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

நெடுஞ்சாலைத் துறையின் வாயிலாக சாலை பணிகள் முடித்து விடப்பட்டிருக்கின்றன. தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என்றும் பழுதான சாலைகளை உடனடியாக செப்பனிடவும் முன்பே அறிவுறுத்தப்பட்டு பணிகள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பருவமழை 2019 - 20 காலகட்டங்களில் மண்சரிவு அதிக அளவு ஏற்பட்டிருக்கின்றன.

அங்கு மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் கம்பி வலைகள் பொருத்தப்பட்டு கல் முகடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுப்பணித்துறை சார்பாக குளங்களுக்கு செல்ல வேண்டிய கால்வாய்கள் சீர் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் குளங்களுக்கு தடையின்றி இயல்பாக தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தற்பொழுது பெரும்பாலான குளங்களில் 70 முதல் 80 சதவீத அளவில் தண்ணீர் தேங்கி இருப்பதால் இந்த வடகிழக்கு பருவமழை குளம் மற்றும் ஏரிகளின் முழு கொள்ளளவு எட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக மழை பொழிகின்ற நேரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பயன்பாட்டுக்கு ஏதுவாக கிணறுகள் குளங்கள் நீர் மேலாண்மை ஓங்கி இருப்பாதாக மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலே தெரிவித்திருக்கின்றனர்.

அதிக மழை பொழியும் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் அதிகாரிகளை பேரிடர் மீட்பு குழுவினரை கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு அழைத்து பேசி உதவி கோரலாம்.

தாலுக்கா பகுதிகளில் தாலுகாவுக்கு ஒன்று என்ற விகிதத்தில் 11 கட்டுப்பாடு அறைகளும், 7 நகராட்சிகளில் 7 கட்டுப்பாட்டு அறைகளும், மாநகர் பகுதிகளில் மண்டலத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் 5 கட்டுப்பாட்டு அறைகளும், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம், கார்பரேசன் அலுவலகம் என இரண்டு முதன்மையான அலுவலகங்களிலும் தலா ஒன்று வீதம் கோவை மாவட்டம் முழுவதும் 25 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

0422-2301114, 04221077 என்ற எண்ணுக்கும் பொதுமக்கள் உதவிக்கு அழைக்கலாம்.

மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளாக பார்க்கப்படுகின்ற முன்னதாக வெள்ளம் சூழ்ந்த இடங்களாக மாவட்ட நிர்வகத்தால் அடையாளம் காணப்பட்ட 16 இடங்களில் கூடுதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மருந்துகள் அடிப்படை தேவைகள் கொண்ட 66 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

வடகிழக்கு பருவமழை அதிகம் பொழிந்தாலும் இயல்பு வாழ்க்கை பொழிவிழக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராகியிருக்கின்றன.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...