கோவையில் இன்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மு,பிரதாப் பருவமழை தொடர்பான சந்தேகங்கள், தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்களின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சியின் பல்வேறு பிரதான கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
மேலும் பல மழைநீர் வடிகால்கள் தற்போது தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அவினாசி மேம்பாலத்தின் கீழ்பகுதி, கிக்கானி பாலம் ஆகியவற்றில் கூடுதலாக 2 அதிவேக மின்மோட்டார்கள் பயன்படுத்தி மழைநீரை வெளியேற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பெரியகுளம், வாலாங்குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீரின் அளவினை கண்காணித்திடவும், மேலும், தேவைப்படும் இடங்களில் மழைநீர வடிகால்களை தூர்வாரிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கும் தலா 100 மணல் மூட்டைகள் வீதம் 500 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், சாலைகள், தெருக்களில் சாய்தளம் அமைத்து ஆக்கிரமித்து உள்ள சாய்தள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது நடைபெற்றுவருகிறது.
இப்பணிகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் தினமும் கண்காணித்து, சாய்தள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். மேலும், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் பருவமழை தொடர்பான தகவல்களை தெரிவிக்க ஏதுவாக 24/7 செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் வகையில் இயங்கி வருகிறது.
பொதுமக்கள் பருவமழை தொடர்பான சந்தேகங்கள், தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண். 8190000200, 0422-2302323, 0422-2300132 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் அரசு, மண்டல உதவி ஆணையார்கள் முத்துராமலிங்கம், சேகர், மோகனசுந்தரி, அண்ணாதுரை, மகேஷ்கனகராஜ், நகா் நல அலுவலர் மரு.பிரதப் வாசுதேவன் கிருஷணகுமார், நகரமைப்பு அலுவலா் கருப்பாத்தாள். அனைத்து உதவி நகரமைப்பு அலுவலர்கள், மாநகராட்சி பொறியாளா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.