பாலியஸ்டர்‌ பஞ்சின்‌ முக்கிய மூலப்பொருளான மோனோ எத்திலின்‌ கிளைக்கால்‌ (MEG) மீதான குவிப்பு வரி நிராகரிப்பு - சைமா வரவேற்பு

அரசின் இந்த‌ முடிவை வரவேற்கிறோம். அதற்கு உதவிய பிரதமர்‌ நரேந்திர மோடி மற்றும்‌ மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்‌ கோயல்‌ ஆகியோருக்கு சைமா சார்பாக அதன் தலைவர் ரவி சாம் தெரிவித்துள்ளார்.



கோவை: உலகலாவிய போட்டித்தன்மையைப்‌ பெறவும்‌, ஜவுளி மற்றும்‌ ஆடை உற்பத்தி மற்றும்‌ அதன்‌ ஏற்றுமதியின் அதிவேக வளர்ச்சி விகிதத்தை அடையவும்‌, மத்திய அரசு பல்வேறு முன் முயற்சிகளை எடுத்து, குறிப்பாக MMF மூலப்பொருட்கள்‌, இழைகள்‌ மற்றும்‌ இழை நூல்கள்‌ தொடர்பான கட்டமைப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்து வருகிறது.

உலகளவில் போட்டித்தன்மையைப்‌ பெறவும்‌, ஏற்றுமதியை அதிகரிக்கவும்‌, ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகள்‌, ஆஸ்திரேலியா மற்றும் மொரிஷியஸ்‌ நாடுகளுடன்‌ வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தது மேலும்‌ பல்வேறு நாடுகளுடன்‌ வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்‌ ஏற்படுத்த பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

உலகளவில்‌, MMF ஜவுளி இழை மற்றும்‌ பருத்தி நுகர்வு விகிதம்‌ 65:35 ஆக உள்ளது. அதே சமயம்‌ இது இந்தியாவில்‌ நேர் மாறாக உள்ளது. MMF மூலப்பொருட்கள்‌ 23 சதவீதம்‌ வரை இந்தியாவில்‌ அதிகமாக இருந்ததே இதற்கு காரணமாகும்‌.

MMF ஜவுளி உற்பத்திப்‌ பிரிவில்‌ பெரிய அளவிலான முதலீட்டை ஊக்குவிப்பதற்காக உற்பத்தியுடன்‌ இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தையும்‌ அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில்‌, மத்திய வர்த்தக நிவாரண இயக்குனரகம்‌ 27.10.2022 தேதியிட்ட அறிவிப்பின்படி பாலியஸ்டர் பஞ்சு தயாரிக்க உபயோகிக்கும்‌ மூலப்பொருளான MEG மீது முன் மொழியப்பட்ட குவிப்பு வரியை நிராகரித்துள்ளது.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கோவை‌ தென்னிந்திய சைமா பஞ்சாலைகள்‌ சங்கத்தின்‌ தலைவா்‌ ரவிசாம்‌ தெரிவித்ததாவது;-

அரசின் இந்த‌ முடிவை வரவேற்கிறோம் என கூறி அதற்கு உதவிய பிரதமர்‌ நரேந்திர மோடி மற்றும்‌ மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்‌ கோயல்‌ ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்‌ கொண்டார்.

அதை தொடர்ந்து ஜவுளித்துறையின்‌ MMF பிரிவு, குறிப்பாக பாலியஸ்டர்‌ பஞ்சு, வளர்ச்சி இயந்திரமாக இருக்கும்‌ என்றும்‌, அது பல இலட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும்‌ என்றார் அதை தொடர்ந்து பேசிய ரவிசாம் தொழில்நுட்ப ஜவுளி வளர்ச்சிக்கு, பாலியஸ்டா்‌ ஸ்டேபிள்‌ ஃ.பைபர்‌ போதுமான அளவில்‌ உலக விலையில்‌ கிடைப்பது உறுதி செய்தால்‌ இந்த துறையின்‌ வளர்ச்சியை ஊக்குவிக்கும்‌.

நாடு பருத்தி தட்டுப்பாட்டை சந்திக்க தொடங்கியுள்ளதால்‌, பல நூற்றுக்கணக்கான நூற்பாலைகள்‌, நெசவாலைகள்‌, பின்னலாடை மற்றும்‌ ஆயத்த ஆடை பிரிவுகள்‌ பாலியஸ்டர்‌ ஜவுளி உற்பத்திக்கு தங்களை மாற்றிக்‌ கொண்டு வருகின்றன. அதன்‌ மூலம்‌ இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதோடு, தங்களது நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க உதவுகின்றன என்று சைமா தலைவர்‌ ரவிசாம்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...