கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட பகுதியில்‌ கிராம சபா கூட்டம்‌ நடைபெற்றது

கோவை வடக்கு மண்டலம்‌ கணபதி, நேரு நகர்‌ பகுதிகளில் மாநாகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர்‌ முன்னிலையில்‌ நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள்‌ தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கினார்கள்‌.


கோவை: கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட கணபதி, நேரு நகர்‌ பகுதிகளில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ‌தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌ முன்னிலையில்‌ இன்று கிராம சபா கூட்டம்‌ நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கிராம சபை கூட்டமானது உள்ளாட்சி தினமான நவம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெறும்.



கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் முறையில் நடைபெற்ற சபா கூட்டத்தில் ‌பொதுமக்கள்‌ தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் வழங்கினார்கள்‌.

இக்கூட்டத்தில்‌ மேயர்‌ ‌மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்ததாவது,



தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஆணைக்கிணங்க கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 100 வார்டுகளிலும்‌ வார்டு சபா கூட்டம்‌ நடத்திட உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்‌ ஒரு பகுதியாக மேயர்‌ 19-வது வார்டு பகுதியில்‌ வார்டு சபா கூட்டமானது தற்போது நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின்‌ 100 வார்டுகளிலும்‌ மொத்தமாக 25 இலட்சத்திற்கும்‌ மேற்பட்ட மக்கள்‌ வசிக்கின்றனர்‌. இந்த வார்டு சபாவின்‌ முக்கிய நோக்கம்‌ மக்களின்‌ தேவைகளை இக்கூட்டங்களின்‌ மூலம்‌ கோரிக்கைகளாக பெறப்பட்டு, அவற்றை நிவார்த்தி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்‌.

முதல்வரின் முக்கிய கொள்கை அரசை தேடி மக்கள்‌ வருவதை தவிர்த்து மக்களைத்‌ தேடி அரசு செல்வதை கொள்கையாக கொண்டவர்‌. பொதுமக்கள்‌ தங்களது பகுதிகளில்‌ உள்ள கோரிக்கைகளை இந்த வார்டு சபா கூட்டத்தில்‌ மனுக்களாக கொடுக்கலாம்‌ என்றார்.

மேலும்‌, இந்த 19-வது வார்டை அனைத்து வார்டுகளுக்கும்‌ முன்மாதிரி வார்டாக மாற்றிட பொதுமக்கள்‌ தங்களது ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்‌” என மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தெரிவித்தார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌ உதவி செயற்பொறியாளர்‌ செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர்‌ விமலா, மண்டல சுகாதார அலுவலர்‌, இராதாகிருஷ்ணன்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌, மற்றும்‌ ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...