கோவை மலர் அங்காடி புனரமைப்பு பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் கோவை - மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் உள்ள மலர் அங்காடி புனரமைப்பு பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு, மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அரசு மலர் அங்காடி அமைந்துள்ளது. இந்த மலர் அங்காடியில் முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 120 லட்சம் மதிப்பீட்டில் புரனமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் புனரமைப்பு பணிகள் திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.



இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ். சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...