கோவையில் போதை பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: காவல் ஆணையாளர், பொதுமக்கள், சைக்கிளர்ஸ் பங்கேற்பு

போதைப்பொருள் இல்லா தமிழகம் எனும் சைக்கிள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள கோவையை சேர்ந்த விஷ்ணு ராம் என்பவர் ஹைதரபாத்தில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கி குர்னூல், பெங்களூரு வழியாக கோவை வந்தடைந்தார். இவர், 1000 கி.மீ தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.


கோவை: தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாநகர், புறநகர் பகுதிகளில் போலீசார் தனிப்படை ரோந்து மூலம் போதை பொருள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருபுறம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் கல்லூரிகளில் மற்றும் பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, போதை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க கோவையை சேர்ந்த விஷ்ணு ராம் என்பவர் போதைப்பொருள் இல்லா தமிழகம் எனும் சைக்கிள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, 1000 கிலோ மீட்டர் தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் பயணித்து சாதனை செய்துள்ளார். ஹைதரபாத்தில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கிய விஷ்ணுராம் குர்னூல், பெங்களூரு வழியாக கோவை வந்தடைந்தார்.



இன்று கோவை வந்தடைந்த விஷ்ணுராமை, கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து, அவருடன் ஏர்போர்ட் பகுதியிலிருந்து அவினாசி சாலை வழியாக காவல்துறை ஆணையர் அலுவலகம் வரை ஆணையர் சைக்கிள் ஓட்டிபடி வந்தார்.



சைகிளர்ஸ், பொதுமக்களும் சைக்கிள் ஓட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இது குறித்து விஷ்ணுராம் கூறுகையில், அண்மையில் முதல்வர் கூறிய போதைப்பொருள் இல்லா தமிழகம் எனும் பிரச்சாரத்தை வலியுறுத்தும் விதமாக இந்த சாதனை பயணத்தை துவங்கியதாக தெரிவித்தார்.

குறைந்த நேரத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணம் மூலம் கடந்து சாதனையை விஷ்ணு ராம் படைத்ததாக இண்டியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் தந்திருக்கின்றனர் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...