கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சமீபத்தில், கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தையொட்டி, இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டமானது, வழக்கமாக நடைபெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டமாக இல்லாமால், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் குறித்து முக்கியமாகஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்புமட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துதல் குறித்துஆலோசிக்கப்படும் என தெரிகிறது.



Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...