கொடிசியா சாலையில் கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது

கோவை கவுண்டம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த கஞ்சா விற்ற சுகுணா என்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு எழுதியது கோவை கோர்ட்.



கோவை: கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இரவு நேர ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ந் தேதி பீளமேடு போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அவர்கள் கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் அருகே வந்தபோது கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்த சொக்கநாதன், அவருடைய மனைவி சுகுணா (வயது 51) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த தம்பதியை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.3 ஆயிரத்து 600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக போதைப்பொருள் வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போதே சொக்கநாதன் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து சுகுணா மீது மட்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது, இதைதொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சுகுணாவுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் சுகுணாவை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...