கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர். திருமண தடைகள் நீங்க சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.


Coimbatore: கோவை பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

தேங்காய், பழம், பட்டுப்புடவை, வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், வளையல், இனிப்பு, காரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சீர் வரிசை தட்டுக்கள் வைத்து யாகங்கள் நடத்தப்பட்டன. மாலைகள் மாற்றி, மாங்கல்ய சிறப்பு பூஜைக்குப் பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் ஆகம விதிப்படி சிறப்பாக நடைபெற்றது.



இந்த திருமண விழாவில் பெரிய தடாகம், சின்ன தடாகம், துடியலூர், சோமையம்பாளையம், டிவிஎஸ் நகர், ஆனைகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற அன்னையின் திவ்ய கல்யாண தரிசனத்தைப் பெற்று அருளாசி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் ஆன்மீக முன்னேற்றம் நிலவ வேண்டும் என சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் கயிறு, மஞ்சள், இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் வடை பாயாசத்தோடு கல்யாண விருந்தும் பரிமாறப்பட்டது.

ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தனது அருளாசியில், "இத்திருக்கல்யாணத்தில் பங்கேற்பதன் மூலம் திருமண தடைகள் நீங்கி திருமணயோகம் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி மற்றும் வளம் பெருகும். ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஐஸ்வர்யம் கிடைக்கும். சந்ததி விருத்தி மற்றும் தலைமுறைகளுக்கும் மங்களகரமான வாழ்வு அமையும். ஆன்மீக முன்னேற்றம், தெய்வீக அருளும் பெருகும்" என்று தெரிவித்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை லலிதாம்பிகை அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் திறம்பட செய்திருந்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...