கோவை மாநகரம் முழுக்க வரும் 31ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்த பாஜக வேண்டுகோள்

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 31ம் தேதி கோவை முழுக்க முழு பந்த் நடத்தபடுவதாகவும் அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவும் கேட்டுள்ளார்.



கோவை: உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார்.

இந்த திடீர் விபத்தான வெடி சம்பவம் கோவை முழுக்க பல அதிர்வலைகளை கொடுத்தது.

காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.

உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.



இச்சம்பவம் குறித்து கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலையோங்கி உள்ளது என்பதை இந்த கார் சம்பவம் உணர்த்துகிறது. 1998ம் ஆண்டு திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போது தொடர் குண்டு வெடிப்பால் கோவை மாநகரமே துயரத்திற்கு உள்ளானது. 

தற்போது மீண்டும் அது போன்ற சதி கோவையில் நடைபெற இருந்தது அதிர்ஷ்டவசமாக அதன் மூளையாக செயல்பட்டவர் அதனாலேயே உயிரிழந்திருக்கிறார். கோட்டையில் ஆள்பவர்கள் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் கோட்டை ஈஸ்வரனால் மீண்டும் கோவை காக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் நடந்தவுடன் டிஜிபி வந்ததை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அவர் சரிவர ஆய்வு செய்யாமல் சிலிண்டர் வெடித்ததுள்ளது என அறிக்கை அவரது பொறுப்பிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. 

டிஜிபி சிலிண்டர் ஏன் வெடித்தது என்பதில் தான் கருத்தை தெரிவித்திருக்க வேண்டும். இறந்து போன நபர், இஸ்லாமிய தீவிரவாதிகளின் உறவினர் என்பதை யாராலும் மறுக்க இயலாது. சிறையில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதையும் மறுக்க இயலாது.

தமிழக உளவுத்துறை அவரது நடவடிக்கையை கண்காணித்திருக்க வேண்டும். அவர்கள் கண்காணித்திருந்தாலும் அதில் தோல்வி அடைந்திருப்பதற்கான காரணத்தை தமிழக காவல்துறை சிந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் மூன்று நாட்கள் தூக்கத்தில் இருந்தவர் போலவும் இன்று தான் முழித்து கொண்டவர் போலவும் அறிக்கை அளித்துள்ளார். 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய தடை செய்யப்பட்டிருப்பது மத்திய அரசால் என்ற போதிலும் அந்த அமைப்பு கேரளாவில் வலிமையாக இருக்கின்ற இயக்கம். பாஜக அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட போதே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இது போன்று ஒரு நிகழ்வை நடத்துவதற்கான தைரியம் அவர்களுக்கு வந்திருக்காது. 

தமிழக அரசு இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டு கண்டும் காணாமல் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இது தான் திமுக வின் வரலாறும் கூட. வரலாற்று தவறுகளில் இருந்து பாடத்தை கற்று கொள்ளாமல் இருக்கும் கட்சி திமுக.

அவர்கள் ஓட்டையே குறியாக வைத்துள்ளார்களே தவிர சமூக நலனில் அக்கறை இல்லை. கடவுள் அருளால் மிக பெரிய விபத்து கார் வெடிப்போடு முடிந்துள்ளது. தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கை தான் இதனை முடிக்கும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் கோவையை குறி வைப்பதற்கான காரணம் என்னவென்றால் கோவை சென்னைக்கு அடுத்து பொருளாதாரத்தில் இருக்கின்ற மிக பெரிய நகரம், இதை தகர்த்து எறிந்து விட்டால் அவர்களது அடுத்த குறி சென்னையாக தான் இருக்கும்.

காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் தங்களுக்கு ஒன்றரை டன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. NIA வுடன் இணைந்து தமிழக காவல்துறை செயல்பட வேண்டும். தமிழக காவல்துறை NIA க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழக அரசின் மெத்தன போக்கையும், தமிழக அரசு பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கண்டித்தும் பாஜக கோவை மாநகர மாவட்டம் சார்பில் 31ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்த வேண்டுகோள் விடுக்கிறது.

இதற்கு பொதுமக்கள் வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கேரளாவில் இல்லாத பயங்கரம் தமிழகத்தில் தலைத்தோங்குகிறது என கூறினால் அதற்கு திமுக தான் காரணம். அனைத்து இஸ்லாமியர்களையும் நாங்கள் தீவிரவாதிகளாக பார்க்கவில்லை, ஆனால் துர்திஷ்டவசமாக இருக்கின்ற தீவிரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள், இவர்களை இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்த இஸ்லாமியர்களும் இந்த பந்த் திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்த பந்த் திற்கு திமுக உட்பட அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக, பாமக, மதிமுக என அனைத்து இயக்கங்களிடம் இருந்தும் ஆதரவு கேட்கிறோம். மற்றவர்கள் இதனை முன்னெடுக்க வராத போது பாஜக தான் இதனை முன்னெடுக்க வேண்டி உள்ளது என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...