கோவை கார் வெடிப்பு: கோவையை கடவுள் காப்பாற்றி இருக்கிறார்; மாநகர உளவுத்துறையின் தோல்வியே காரணம் - மாவட்ட ஐக்கிய ஜமாத் குற்றச்சாட்டு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து மாநகர ஆணையரை சந்திக்க வந்த மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர், அப்துல் ஜப்பார், கோவை மாநகர உளவுத்துறைக்கு அனுபவம் வாய்ந்த பழைய காவலர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.



கோவை: கோவை தெற்கு பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்திற்கு பிறகு அசாதாரண சூழல் காரணமாக மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட ஜக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.



அப்போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தீவிரவாத செயலில் ஈடுபட முயற்சி எடுத்திருக்கிறார்கள். கடவுள் தான் கோவை மாநகர மக்களை காப்பாற்றி இருக்கிறார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதற்கான தண்டனையை கடவுள் வழங்கி இருக்கிறார்.



இந்த செயலில் ஈடுபட்டவர்கள் இன்னும் கோவையில் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து தீவிரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க ஜக்கிய ஜமாத் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தருவதோடு இணைந்தும் செயல்படும்.



மாநகர ஆணையரை சந்திக்க வந்ததன் முக்கிய நோக்கமே மாநகர உளவுப்பிரிவு செயல்படவில்லை என்பதால் தான். அவர்கள் முறையாக அரசுக்கு தகவல் சொல்லவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

மாநகரின் முக்கிய பகுதியில் செயல்படும் குனியமுத்தூர், உக்கடம், பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையங்களில் புதிதாக போடப்பட்ட உளவுத்துறை காவலர்களை எடுத்துவிட்டு, அனுபவம் வாய்ந்த பழைய காவலர்களையே பணியமர்த்த வேண்டும்.

அப்போது தான் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை ஒழிக்க முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...