கோவை பீளமேட்டில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால் பரபரப்பு

தனியார் பள்ளி முன்பு நிறுத்தப்பட்டிருந்த சென்னை பதிவெண் கொண்ட கார், அதே பள்ளியில் பணியாற்றும் பேருந்து ஓட்டுனர் ரத்னகுமார் என்பவருடையது என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.



கோவை பீளமேடு அருகே தனியார் பள்ளி முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண்கொண்ட கார் நிற்பதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் அதே பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வரும் ரத்தினகுமார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்ஆவாரம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை எடுத்து வந்ததாகவும், காரை பழுது நீக்கும் கடைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.



இதனை அடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்த காரை ரத்தினகுமார் எடுத்துச் சென்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தனியார் பள்ளி முன்பு கேட்பாரற்று நின்ற காரால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...