கோவை மதுக்கரை அருகே பாறை உருண்டு வீட்டின் சுவர் இடிந்ததால் பரபரப்பு…!

கோவை மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியில் நேற்று ஒரு பகுதியில் உள்ள வீட்டின் மீது இராட்ச பாறைகள் உருண்டு விழுந்ததால் வீட்டின் சுவர் சேதமடைந்தது. விபத்தின் போது, வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள மலைச்சாமி கோவில் வீதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் அரசு பட்டா வழங்கிய நிலத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த லீலாவதி என்பவர் தனது மகள், வசந்தகுமார், பேத்தி சசிகலா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை லீலாவதி மற்றும் சசிகலா அவரது குழந்தைகளுடன் வீட்டில் இருந்த போது, வீட்டின் சுவர் மீது ஏதோ மோதியது போல சத்தம் கேட்டுள்ளது.



இதையடுத்து, வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, அருகே இருந்த சிறு பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியது தெரியவந்தது. அப்போது, திடீரென அருகே மற்றொரு இராட்ச பாறை உருண்டு வீட்டின் சுவர் மீது மோதியதில், சுவரின் ஒரு பக்கம் உடைந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவறிந்து வந்த மதுக்கரை போலீஸார் மற்றும் மதுக்கரை வட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய கவுசல்யா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விபத்தால் வீடு சேதம் அடைந்துள்ளதால், போதிய அரசு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...