கோவை நகை பட்டறையில் ரூ. 55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருடி தப்பிய வடமாநில ஊழியருக்கு வலைவீச்சு..!

கடையின் சாவியை தவறாக பயன்படுத்தி ரூ. 55 லட்சம் மதிப்பிலான 1067 கிராம் தங்கத்தை கொள்ளையடித்து சென்ற தங்க பட்டறை ஊழியர் மீது வழக்குபதிவு செய்து வெரைட்டி ஹோல் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை ஸ்ரீ சண்முகா நகர் பகுதியில் "மோகன் டை ஒர்க்ஸ்" என்ற நகை பட்டறையை கடந்த 12 வருடங்களாக மோகன் என்பவர் நடத்தி வருகிறார். இவரிடம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரமோத் என்ற தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கமாக, கடையின் சாவியை பிரமோதிடம் ஒப்படைத்து பூட்ட சொல்வதை மோகன் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில்,கடந்த 18 ஆம் தேதி காலையில் சீக்கிரமே நகை பட்டறையை திறக்கப் போவதாக நகை பட்டறை உரிமையாளருக்கு ப்ரமோத் மெசேஜ் செய்துவிட்டு நகை பட்டறையை திறந்து உள்ளார். பின்னர், மோகன் வழக்கம் போல் காலை பட்டறைக்கு வந்திருக்கின்றார்.

அப்போது, நகை பட்டறை திறந்து கிடந்துள்ளது, ப்ரமோத்தும் நகை பட்டறையில் இல்லை. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது,ரூ. 55 லட்சம் மதிப்பிலான 1067 கிராம்

தங்கம் காணாமல் போனதுதெரியவந்துள்ளது.

உடனடியாக, மோகன் அளித்த புகாரின் அடிப்படையில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் இந்திய தண்டனை சட்டம் 420, 408 பிரிவின் கீழ்ரூ. 55 லட்சம் மதிப்பிலான 1067 கிராம்

தங்கத்தைகொள்ளையடித்து சென்ற கொள்ளையன் மீதுவழக்குபதிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆபரண வேலைபாடுகளுக்கு ஆர்டர்கள் அதிகமான உள்ளதால், பொதுவாக தங்கப்பட்டறைகளில் அதிக அளவு தங்கம் வைத்திருப்பார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி திட்டமிட்டு கொள்ளை முயற்சி ஈடுபட்ட தொடங்கப்பட்டறை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...