கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை இன்று நேரில் சந்தித்த கிணத்துக்கடவு ஊராட்சி மன்றம். தங்கள் ஊராட்சியின் தேவைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தது.
அந்த மனுவில் கிணத்துக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வங்கி கணக்கில் இருந்து ஒன்றாவது வங்கி கணக்கில் நிதி பரிமாற்றம் செய்ய வேண்டும், ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நியமனம் செய்ய வேண்டும்.

மேலும் ஊராட்சிகளில் தெருவிளக்கு வாங்குவதில் உள்ள குளறுபடிகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அடங்கிய மனுவை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் கிணத்துக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து மனு அளித்தனர்.

இதில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் பிரபு என்ற திருவாக்கரசர், கௌரவ தலைவர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர் முருகவேல், இணை செயலாளர் ரத்னசாமி, தர்மராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.