வார்டு எண்: 41 வீரகேரளம் மின்‌ மயானத்தை அரசே பராமரிக்க வேண்டும் - கோவை மேற்கு மண்டல கூட்டத்தில் கோரிக்கை மனு

வீரகேரளம் பகுதியில் ஈஷா நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் மின் மயானத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி மேற்கு மண்ட கூட்டத்தில் 41வது மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு.


கோவை மாநகராட்சியில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வீரகேரளத்தில்‌ செயல்பட்டு வரும்‌ மின்‌ மயானம்‌ ஈஷா நிறுவனத்தால்‌ பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மின் மயானத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, 41வது மாமன்ற உறுப்பினர் சாந்தி சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, இந்த மின்மயானத்தில், நிர்ணயிக்கப்பட்ட எரியூட்டும்‌ கட்டணத்தை விட பொது மக்களிடம்‌ அதிகமாக கட்டாய கட்டணம் வசூல்‌ செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமான தொகை வசூல் செய்யப்படுவதால், பெரும்‌ சிரமத்திற்கும்‌, மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



எனவே இந்த மின்‌ மயானத்தை பொதுமக்களின்‌ நலன்‌ கருதி கோவை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க வேண்டும். மேலும்‌ தற்காலிகமாக கட்டண விபரங்களை விளம்பர பலகை வைத்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.



இவ்வாறு நடைபெற்ற கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...