கோவையில் வரும் 25ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம் - மாநகர ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடில்லை எனக்கூறி, வரும் 25ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு.



கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்-2 தேதி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினரை, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் அப்போது, அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சு வார்த்தையின் போது கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனால் தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கையான சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக அரசின் அனுமதி வேண்டி கருத்துரு அனுப்பலாம் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவு தான் இது என்றும், இந்த தீர்மானத்தில் தங்கள் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி மீண்டும் வரும் தீபாவளி முதல் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்பார்த்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எண்ணி பட்டாசு, மாலைகளுடன் மாநகராட்சி வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால் இன்று மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உடன்பாடு இல்லாததால், வாங்கி வந்த மாலையை வீசி எரிந்ததோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றும் வரை தங்களது இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...