கோவை செல்வபுரம் அருகே 3 கிலோ தங்க நகையை பெற்று மோசடி - நகை கடை உரிமையாளர் கைது

சுக்ரவார்பேட்டை பகுதியில் நகை பட்டறை உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி மதிப்பிலான நகைகளை வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த காஜா ஹுசைன் என்பவர் சுக்ரவார்பேட்டை பகுதியில் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நகை கடைகளுக்கு ஆபரணங்கள் செய்து விநியோகம் செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆர்.ஜி. வீதி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் காஜா ஹுசைனுடன் வரவு செலவு வைத்திருந்துள்ளார். விஜயகுமாருடன் அவரது மனைவி விஜயகுமாரியும் சேர்ந்து நகைக்கடை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில். கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 306 கிராம் தங்க நகை ஆபரணத்தை காஜா ஹுசைன் விஜயகுமாரிடம் விநியோகம் செய்திருக்கிறார். ஆனால் நகைக்கான பணத்தை தராமல் விஜயகுமார் தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தங்க நகைகளையும் திருப்பி தராமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இதுதொடர்பாக காஜா ஹுசைன் வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தபுகாரின் அடிப்படையில் போலிஸார் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் 406 மற்றும் 420 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...