நீலகிரி தொட்டபெட்டா மலைப் பகுதிகளில் பூக்கத் தொடங்கிய சிறுகுறிஞ்சி மலர்கள் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

உதகை தொட்டபெட்டா மலைப்பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய வகையான சிறுகுறிஞ்சி மலர்கள் பூக்கத் துவங்கியுள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் மலை முழுவதும் நீலநிறப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும்.



நீலகிரி: நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படும் குறிஞ்சி செடியானது, இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில்பூத்துக் குலுங்கும் நீல நிற மலர்களின் காரணமாகவே, தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரிஎன்ற பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த நீலக்குறிஞ்சிமலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. இந்த செடியின் உயரம் சுமார் 30 சென்டிமீட்டர் முதல் 60 சென்டிமீட்டர் வரையில் இருக்கும். இந்த செடியில் பூக்கும் பிரகாசமான ஊதாபூக்கள், கோயில் மணியின் உருவம் கொண்டவையாக இருக்கும்.



மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இந்த சிறுகுறிஞ்சி மலர்கள், தொட்டபெட்டா மலைச் சிகர பகுதிகளில் தற்போதுபூக்கத் துவங்கியுள்ளன. இந்த குறிஞ்சி மலர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் தொட்டபெட்டா மலைச் சிகரம் சுற்றியுள்ள மலை முழுவதும் பூத்துக் குலுங்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாகதொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் இந்த சிறுகுறிஞ்சி மலர்கள், தற்போது பூக்கத் துவங்கியுள்ளது மலைகிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...