கோவை விமான நிலையத்தின் ஓடுதள புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இந்த மாதம் தொடக்கப்படவிருந்த, கோவை - கோவா உள்ளிட்ட அனைத்து நள்ளிரவு விமான சேவைகளும் டிசம்பர் மாதம் இறுதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவை: பொதுவாக அனைத்து விமான நிலையங்களிலும் விமான ஓடுதளங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுவது வழக்கம். இதேபோல், கோவை விமான நிலையத்தில் ஓடுதளங்கள் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதி வரை இந்த இரவு நேர சேவைக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவை விமான நிலையத்தில் ஓடுதளம் புனரமைப்பு பணிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாதம் முதல் கோவை - கோவா உள்ளிட்ட நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில விமான சேவை தொடங்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் திட்டமிட்டன. அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில சேவைகளுக்கு டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது.
விமான நிலையத்தில் ஓடுதள புனரமைப்பு பணிகள் தொடரும் காரணத்தால், டிசம்பர் மாத இறுதி வரை நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விமான சேவை வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.
திட்டமிட்டபடி பணிகள் முடிந்துவிட்டால் ஜனவரி முதல் கோவை விமான நிலையத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் விமான சேவை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை - கோவா இடையே வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நள்ளிரவு விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஓடுதள புனரமைப்பு பணிகள் காரணமாக 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.