கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் மட்டும் 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையம், கோவை மாவட்டம் உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 மாவட்டங்களை சேர்ந்தமக்களுக்கும் பயனளித்து வருகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் விமானங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது, தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக விமான போக்குவரத்து மெல்ல மீண்டு வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தினமும் 24 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர அட்டவணையில் இல்லாததனியார் விமானங்கள் மற்றும் முப்படைகளுக்கு சொந்தமான விமானங்கள் உள்ளிட்ட பல விமானங்கள் கோவை விமான நிலையத்தில்இருந்து இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 2021-22 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 3,127 விமானங்களும், சர்வதேச பிரிவில் 131 விமானங்களும் என 3,258 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதனிடையே நடப்பாண்டு 2022-23 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 6,862 விமானங்களும், சர்வதேச பிரிவில் 520 விமானங்களும் என 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 874 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும்,நடப்பாண்டு 2022 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,460 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை விமான நிலைய அதிகாரி்கள் கூறியதாவது, கோவை மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்து நிலையான வளர்ச்சி காணப்படுகிறது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என எதிர்வரும் மாதங்களில் விழாக்காலம் வரவிருப்பதால் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையும் பல எதிர்வரும் மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.