சர்வதேச பேரிடர் இன்னல் குறை தீர்ப்பு தினம்: கோவையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைதீர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், ஆபத்துக் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: சர்வதேச பேரிடர் இன்னல் குறைதீர்ப்பு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.



தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினரின் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சிநடத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மேலும் தன்னார்வலராக செயல்படும் மாணவர்கள் பலருக்கும் இந்த ஒத்திகை குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பேரிடர் காலத்தின் போது மீட்பு படையின் போது பயன்படுத்தப்பட கூடியஉபகரணங்கள் குறித்தும்செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல் வெள்ளம் ஏற்படும் போது, ஆபத்துக் காலங்களில் வெள்ளத்தில் மிதந்து வரும் பொருட்களை எவ்வாறு மிதவையாக பயன்படுத்தி தப்பிக்கலாம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டஏராளமானோர் கண்டு களித்தனர்.





Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...