கோவை மாநகர ஊர்க்காவல் படையில் சேர வரும் அக்.25 ஆட்சேர்ப்பு முகாம் - இளைஞர்களுக்கு வாய்ப்பு..!

கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.


கோவை: வரும் அக்டோபர் 25ஆம் தேதி, கோவை மாநகர காவல்துறை சார்பில் ஊர்க்காவல் படையில் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகமாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்தரவின்படி, கோவை மாநகர ஊர்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது.

ஆகவே, ஊர்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 25.10.2022ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள், கோவை காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும் தேர்ச்சி பெறாதவர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு - 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் வழங்குமிடம் - கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகம், கோவை காந்திபுரம் சி-1 காட்டூர் காவல் நிலைய வளாகம்.

மேலும் தொடர்புக்கு - 9498171293 , 99423-46806,9498172525.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...