சரவணம்பட்டி அருகேயுள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப்-பில் தவறான மெசேஜ் அனுப்பியது தொடர்பாக கேட்க சென்ற அவரை தாக்கிய 6 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை: சரவணம்பட்டி அருகேயுள்ள விநாயகபுரம் அடுத்த கம்பன் வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விக்ரம் (19). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. (ஐ. டி).முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு, முருகன் நகர் பகுதியை சேர்ந்த இறையன்பு என்பவர் வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இறையன்புவிடம் கேட்பதற்காக கல்லூரி மாணவர் சென்றுள்ளார்.
அப்போது, இறையன்பு தனது நண்பர்களுடன் அங்கு நின்று கொண்டிருந்துள்ளார். இதுகுறித்து கேட்டதும் விக்ரமை, இறையன்பு மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த விக்ரம்சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில், கல்லூரி மாணவர் விக்ரமை தாக்கிய இறையன்பு மற்றும் அவரது நண்பர்கள் குட்டு என்ற ரித்திக், சேட்டு, சுருதிப், கார்த்திக். காளி உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாகியுள்ள 6 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.