தமிழர்களின் சமய அடையாளமான திருநீறை திராவிட அரசு மறுத்துப் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது - பொள்ளாச்சியில் வானதி சீனிவாசன்

பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கோடி சாமிகள் வாழ்ந்த இடத்தில், மத்திய பிரதேசத்தில் பிரதமர் திறந்து வைத்த மகா காளீஸ்வரர் கோயில் திறப்பு விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார்.


கோவை: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையின் நகரில் உள்ள மகா காளீஸ்வரர் கோயிலில், ரூ.850 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, ரூபாய் 351 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வளாகத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து கோவிலில் தரிசனம் செய்தார்.

இந்த நிலையில், மகா காளீஸ்வரர் கோயில் வளாகத்தை பிரதமர் திறந்து வைக்கும் காட்சிகளை நாடு முழுவதும் சிவாலயங்கள், மடங்கள், ஜீவசமாதிகள் ஆகிய இடங்களில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கோடி சாமிகள் வாழ்ந்த இடத்தில், மகா காளீஸ்வரர் கோயில் திறப்பு விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் நேரில் பார்வையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வள்ளலாரின் 200வது பிறந்தநாளையொட்டி மாநில அரசு சிறப்பாக பல்வேறு விழாக்களை கொண்டாடிவிட்டு, முக்கிய சமய அடையாளங்களான திருநீறை மறுத்து பேசுவது கண்டிக்கத்தக்கது.

இப்படிப்பட்ட சமய அடையாளங்கள் இல்லாமல், அவர்களது படங்களை வைப்பதில் திமுக அரசுக்கு என்ன ஆசை இருக்கிறது.

மேலும், வடலூரில் பிரசாதமாக கொடுப்பதே திருநீறு தான். இப்படிப்பட்ட நிலையில், திருநீறு இல்லாத வள்ளலார் படத்தை வைப்பதில் திமுக அரசுக்கு என்ன சந்தோஷம். தமிழர்களின் அடையாளமான திருநீறை எதற்காக திராவிட அரசு மறுத்து பேசுகிறது..?

அலுவல் மொழி என்பதை பிஜேபி அரசு கொண்டு வரவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மாமேதை அம்பேத்கர் மற்றும் அவருடன் இணைந்த குழுவும் முடிவு செய்தது.

இன்று இந்த நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று பாஜக சொல்கிறது. இந்த நாட்டில் மட்டுமே பல்லாயிரம் மொழிகள் உள்ளது. யார் என்ன மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு தாய்மொழி வழியில் கற்றுக் கொடுப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சமாகும். குழந்தைகள் தாய் மொழியில் கற்றால் மட்டுமே சிந்திக்கும் திறன் அதிகரிக்கும், என்று தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...