திருப்பூரில் நடைபெற்ற 48வது சர்வதேச பின்னலாடை கண்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்

உலக நாடுகள் பொருளாதார சுணக்கம் அடைந்துள்ள நிலையில் ஆர்டர்கள் குறைந்தாலும் உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக ஆடை வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ளவே விரும்புகின்றன ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல்.


கோவை: திருப்பூர் பின்னலாடை துறையின் நூல் விலை மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஆர்டர்கள் இன்றி தவித்து வரும் நிலையில் ஆர்டர்களை மீண்டும் கவரும் வகையில் இந்த பின்னலாடை கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த பின்னலாடை கண்காட்சியை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இந்திய பின்னலாடை கண்காட்சி அமைப்பு மற்றும் ஏற்றுமதி வர்த்தக ஏஜென்சி இணைந்து நடத்துகிறது.

48வது சர்வதேச பின்னலாடை கண்காட்சியான இந்நிகழ்வு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரையில் உள்ள நிட்பேர் வளாகத்தில் நடைபெறுகிறது.

திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முன்னணி ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் ஆடைகளை காட்சிபடுத்தினர்.

66 அரங்குகளுடன் 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை காண அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கண்காட்சியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



பின்னர் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆடைகளை பார்வையிட்டு ஆடைகளின் சிறப்பு குறித்து கேட்டறிந்தார்.



இக்கண்காட்சியில் பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட இழையால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அதிக அளவில் காட்சிப்படுத்தப்பட்டது.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் உலக நாடுகள் பொருளாதார சுணக்கம் அடைந்துள்ள நிலையில் ஆர்டர்கள் குறைந்தாலும் உலக நாடுகள் சீனாவுக்கு மாற்றாக ஆடை வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ள விரும்புகின்றன. இதனால் வரும் நாட்களில் பின்னலாடை வர்த்தகம் பெருகும் என்பதால் உற்பத்தியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...