காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகள்; நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - கிணத்துக்கடவு வட்டாட்சியர் அறிக்கை

கிணத்துக்கடவு வட்டத்திற்கு உட்பட்ட மெட்டுவாவி, சிறுகளந்தை, தேவராயபுரம் ஆகிய கிராமப் பகுதிகளில், கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்தப் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா அறிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது கிணத்துக்கடவு பேரூராட்சி.கிணத்துக்கடவு வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்கள் மெட்டுவாவி, சிறுகளந்தை, தேவராயபுரம் ஆகியவை ஆகும்.

இந்த நிலையில், கிணத்துக்கடவு வட்டத்திற்கு உட்பட்ட மெட்டுவாவி, சிறுகளந்தை, தேவராயபுரம் ஆகிய கிராமப் பகுதியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்தப் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா சமீபத்தில் வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காலியாக உள்ள பணி விபரஙகள்:

மெட்டு பாவி- ஆதிதிராவிடர் (SC-W-NP- DW) -1 பணியிடம்

சிறுக்களந்தை மற்றும் தேவராயபுரம்

மிகவும் பிற்படுத்தப்பட்ட டோர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC-G-NP) - 1 பணியிடம்

(பொது/முன்னுரிமை அற்றவர்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(BC- G -NP) - 1 பணியிடம்

(பொது/முஸ்லீம் அல்லாதோர்/முன்னுரிமை அற்றவர்)

பணியில் சேரும் தகுதி:

இந்த பணியில் சேர விரும்புவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் எழுத தெரிய வேண்டும்,ஆதிதிராவிடர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் 21 வயது முதல் 37வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களை பற்றிய சுய குறிப்புகளுடன் கல்வித் தகுதி,வகுப்பு(Community Certificate) மற்றும் இதர சான்றிதழ்களுக்கான ஆதாரங்களுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் எதிர்வரும் 07.11.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்படுகிறது. உரிய தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து மற்றும் வாசித்தல் திறனறிவு தேர்வு 30.11.2022 அன்றும் நேர்முகத் தேர்வு 15.12.2022 மற்றும் 16.12.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்த பணியில் சேர விரும்புவர்கள் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும், உரிய ஆதார சான்றித சான்றிதழுடன் நவம்பர் 7ஆம் தேதிக்குள் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்கள் குறித்து எழுத்து மற்றும் திறனறிவு தேர்வு நவம்பர் 30ஆம் தேதியும், நேர்முகத் தேர்வில் டிசம்பர் 15, 16ஆம் தேதி களில் நடைபெறும் என்றும் கிணத்துக்கடவு வட்டாட்சியர் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...