நகராட்சி செய்ய வேண்டிய பணிகளில் தொய்வு: நகர மன்ற உறுப்பினர்கள் மீது தவறான புகார்கள் எழுகின்றன - வால்பாறை நகரமன்ற துணைத் தலைவர்

வால்பாறை நகராட்சியில் பல்வேறு இடங்களில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளதால், தற்போதுள்ள ஒப்பந்ததாரரை மாற்ற இருமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் மனு அளித்தார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தெருவிளக்குகள் பணி முடங்கியுள்ளதால், ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் குமார் மனு அளித்துள்ளார்.

வால்பாறையில் உள்ள நகராட்சியின் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் ஆணையாளர் பாலு ஆகியோருக்கு நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார்.



அதில், வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 21 வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள், தூய்மை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொண்டாலும், நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அடப்படை பணிகள் சரிவர செயல்படாததால் நகர மன்ற உறுப்பினர்கள் மேல் தவறான புகார்கள் ஏற்படுகிறது.

எனவே, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துதல், கூடுதல் தூய்மை பணியாளர்கள் நியமனம், தெருவிளக்கு பணிகள் என மக்களின் அடிப்படை தேவைகளை நகராட்சி செய்து கொடுக்க வேண்டும்.

முக்கியமாக, தெரு விளக்கு அமைக்கும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது குறித்து இருமுறை நடந்த மன்ற கூட்டங்களில் நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பழைய தெரு விளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்து தெருவிளக்கு அமைப்பது முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...