பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எதிராக பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்த நிலையில், போலீசார் நடவடிக்கை.


கோவை: பொள்ளாச்சி அருகே 13 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் உள்ள பள்ளிகளில் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமி ஒருவர் தனக்கு ஒன்றரை வருடத்துக்கு முன்பாக ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பெயரில் சிறுமியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியின் தாய் பணியாற்றி வந்ததோட்டத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன்(43) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலகிருஷ்ணனை கைது செய்த மகளிர் போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் போக்சாவில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...