மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவையொட்டி பேச்சுப்போட்டி - பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு.

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, வரும் அக்.12-ல் திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு-ரூ.5,000, 2வது பரிசு-ரூ.3,000, 3ஆம் பரிசு-ரூ.2,000 வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, வரும் 12ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுப்போட்டியில்பங்கேற்கபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் வினீத் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் நாளைய தினம் (அக்டோபர் 2) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 12ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

இதில் பள்ளி மாணவா்களுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளிலும்,

கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2,000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...