கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரள கேந்திர பொருப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கோவைபுதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரதியின் தமிழக கேரள கேந்திர பொருப்பாளர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு முதல் கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் தொடர்ச்சியாக 5 வது நிகழ்வாக ஆனந்த கல்யான கிருஷ்ணனின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளனர்.

தகவலறிந்த குனியமுத்தூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த வீட்டிற்கு இந்து அமைப்பினரும் திரண்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு பெட்ரோல் குண்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற பெற்றோர் குண்டு வீச்சு சம்பவங்களை விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று இன்று மாலை காந்திபுரம் பகுதியில் போலீசார் நடத்திய கொடி அணிவகுப்பின் போது காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
விரைவில் இந்த குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் சட்டம் உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் நிலவும் பதற்றமான சூழலை முன்னிட்டு இன்று மாலை ஏஜி டிபி தாமரைக்கண்ணன் தலைமையில் காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.