இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு 45நாள் பயிற்சியும், பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான 6 மாத பயிற்சியில் பங்கேற்க http://coimbatore.nic.in என்ற லிங்கில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கோவை: மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள மாணவர்களுக்கு 6 மாதகால பயிற்சி வழங்கப்படவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், இளம் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும்,செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடி திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில், தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக, ஆட்சியரின் படிப்பிடை பயிற்சி திட்டம் துவங்கப்பட உள்ளது.
இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சியும், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மற்றும் முதுகலை பட்டப்படிப்புபயிலும் மாணவர்களுக்கு, ஆறு மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க, http://coimbatore.nic.in என்ற வலைத்தள பக்கத்தில் சென்று வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம், கல்வி சார்ந்த நோக்கத்துக்காக அளிக்கப்படுகிறது.
இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.