கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

திருப்பூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், கோவை அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு, குறு, நடுத்தர, தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையம் எதிரே தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலக கட்டிடத்தை (டான்காயர்) காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.



இந்த திறப்பு விழாவில், கோவையில் இருந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மேலும், கோவை மாவட்டத்தில் சொலவம்பாளையம்கிராமத்தில் 42.42 ஏக்கரில் 18. 12 கோடி திட்ட மதிப்பீட்டில் 9.6 கோடி மானியத்துடன் கூடிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இதேபோல், கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் 22 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தலங்கள் கொண்ட 510 தொழிலாளர்கள் பயனடையும் வகையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.







Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...