சிறந்த கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி, கும்பகோணத்தை சேர்ந்த மாணவரின் 12 ஆம் வகுப்பு சான்றிதழை பெற்றுக்கொண்டு தர மறுத்த, கோவை தனியார் நிறுவனத்தின் உரிமையாளரை போலீசாரை கைது செய்தனர்.
கோவை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ரவிக்குமார். இவரது மகன் அக்னீஸ்வரன் (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அவரிடம் சிறந்த கல்லூரியில் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர, தாங்கள் உதவி செய்வதாக கூறி கோவை ரத்தினபுரியில் செயல்பட்டு வரும் தனியார் நிர்வாகத்தினர்
தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாணவர் அக்னீஸ்வரன, பெஸ்ட் எடுகேஷன் சென்டர் (Best education centre) என்ற அந்த நிர்வாகத்தினரிடம்தன்னிடமுள்ள கல்வி அசல் சான்றிதழ்களை அனுப்பினார். இதற்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் கேட்கப்பட்ட நிலையில், மாணவர் ஆயிரம் ரூபாய் மட்டும் அனுப்பி உள்ளார்.
இந்தநிலையில், நிர்வாகம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு20 நாட்களை தாண்டியும் மாணவனின் அசல் சான்றிதழ்களை திருப்பி கொடுக்காமலும், கல்லூரியிலும் இடம் வாங்கி கொடுக்கமாலும் இருந்ததுள்ளனர். இதனால் மாணவர் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் முன்பு அக்னிஸ்வரனின் தந்தை ரவிக்குமார் மற்றும் சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
பின்னர் மாணவரின் தந்தை ரவிக்குமார் ரத்தினபுரி காவல் நிலையத்தில் சான்றிதழ்களை பெற்றுத் தருமாறு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர், விசாரணை மேற்கொணடு, மாணவரின் சான்றிதழை பெற்று திருப்பி கொடுக்காத நிறுவனத்தின் நிறுவனர் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர், இது போன்று யாரிடமாவது மோசடி செய்தாரா..?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.