தேசிய மக்கள் நீதிமன்றம்: கோவையில் 4,684-வழக்குகளுக்கு தீர்வு..!

இம்மக்கள் நீதிமன்றம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 23-சிறப்பு அமர்வுகள் மூலம் நீதிமன்ற நிலுவையில் உள்ள மற்றும் அல்லாத வழக்குகள் என மொத்தம் 4684 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 12.08.22 (வெள்ளிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 4,684 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  12.08.22 அன்று காலை 09.30 மணி முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் (National Lok Adalat) நடைபெற்றது.



இந்நிகழ்வினை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

மேலும், இம்மக்கள் நீதிமன்றம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 23-சிறப்பு அமர்வுகள் மூலம் நீதிமன்ற நிலுவையில் உள்ள மற்றும் அல்லாத வழக்குகள் என மொத்தம் 4684 வழக்குகளுக்கு ரூபாய் 14,78,17,457/- தீர்வு காணப்பட்டது.

இந்நிகழ்வில் மற்ற மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...