இம்மக்கள் நீதிமன்றம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 23-சிறப்பு அமர்வுகள் மூலம் நீதிமன்ற நிலுவையில் உள்ள மற்றும் அல்லாத வழக்குகள் என மொத்தம் 4684 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 12.08.22 (வெள்ளிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 4,684 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 12.08.22 அன்று காலை 09.30 மணி முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் (National Lok Adalat) நடைபெற்றது.
இந்நிகழ்வினை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
மேலும், இம்மக்கள் நீதிமன்றம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 23-சிறப்பு அமர்வுகள் மூலம் நீதிமன்ற நிலுவையில் உள்ள மற்றும் அல்லாத வழக்குகள் என மொத்தம் 4684 வழக்குகளுக்கு ரூபாய் 14,78,17,457/- தீர்வு காணப்பட்டது.
இந்நிகழ்வில் மற்ற மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.