கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர் பாலியல் சர்ச்சை: ஆசிரியருக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா..!

கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர் பாலியல் சர்ச்சை தொடர்பாக, ஆசிரியர் மீது தவறில்லை எனவும், முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறி கல்லூரி மாணவிகள் மற்றும் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர் பாலியல் சர்ச்சை தொடர்பாக, ஆசிரியருக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வந்த ரமேஷ் என்ற ஆசிரியர் மீது சில மாதங்களுக்கு முன் சக ஆசிரியர்கள் சிலர் பல்வேறு புகார்களை தெரிவித்ததை தொடர்ந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் தற்போது கோவை அரசு கலைக் கல்லூரிக்கு ஆசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அந்த ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி சில ஆசிரியர்கள் அரசு கலை கல்லூரியில் போராட்டம் மேற்கொண்டனர். அதேசமயம் அவர் மீது எவ்வித தவறும் இல்லை எனக் கூறி சில மாணவிகள் அதே இடத்தில் போராட்டம் மேற்கொண்டனர். பின்பு கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டமானது கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் ரமேஷ் மீது எவ்வித தவறும் இல்லை எனக் கூறி மாணவிகள் நான்கைந்து பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற பதாகைகளையும் ஏந்தியவாறு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஒரு மாணவியின் தாயாரும் தர்ணாவில் ஈடுபட்டார்.



அதனை தொடர்ந்து காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் சந்திக்க அழைத்த பொழுதும் மாணவிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து எங்களை சந்திக்க வேண்டும் என கூறி தர்ணாவை தொடர்ந்தனர்.

அதனை தொடர்ந்து நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்கு ஒப்புக்கொண்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...